போப் பிரான்சிஸ் தவறி விழுந்து விபரீதம் - என்ன ஆச்சு!
போப் பிரான்சிஸ் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ்88. இத்தாலி வாடிகன் நகரில் வசித்து வருகிறார். இவர் வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார்.
எனவே, கடந்த 2 ஆண்டுகளாக அவர் வீல் சேரை தான் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், போப் தனது இல்லத்தில் திடீரென்று விழுந்துள்ளார்.
எலும்பு முறிவு?
இதனால் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு ஏற்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காயம் ஏற்பட்ட பகுதியில் கட்டு போடப்பட்டு இருப்பதாக வாடிகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் படுக்கையில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. சமீபகாலமாக தொடர்ந்து உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.