அதிசயக்குழந்தை; வெறும் 350 கிராம் எடைதான் - காப்பாற்ற போராடிய மருத்துவர்கள்!
350 கிராம் எடையில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளது.
அதிசயக்குழந்தை
கேரளா, எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சஷிஷா என்ற பெண் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது. உடனே, பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் ரோஜோ ஜாய் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் அந்த குழந்தையை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து தொடர்ந்து 100 நாட்கள் சிகிச்சை அளித்தனர்.
தீவிர சிகிச்சை
தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாகவும், அதற்கு நோவா என்று பெயர் வைத்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் எடை 1.850 கிலோ என்ற அளவில் உள்ளது.
தாயும், குழந்தையும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 350 கிராம் எடையுடன் பிறந்த நோவா, தெற்கு ஆசியா நாடுகளில் மிகக்குறைவான எடையுடன் பிறந்த முதல் குழந்தை என்ற பெயரை பெற்றுள்ளார்.