மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமனார் - மகன் எடுத்த அதிரடி முடிவு
மகனுக்கு பார்த்த பெண்ணை மாமனார் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நிச்சயதார்த்தம்
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் சிட்கோ பகுதியில் இளைஞர் ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இளைஞர் திருமண வயதை எட்டிய நிலையில் அவரது தந்தை அவருக்கு பெண் பார்க்க தொடங்கியுள்ளார்.
அதில் ஒரு பெண்ணை அவரது மகனுக்கு பிடித்துவிட்டதால் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து விட்டு கல்யாண வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மருமகளுடன் திருமணம்
அப்போது மகன் காதல் வயப்பட்ட பெண் மீது தந்தையும் காதல் வயப்பட்டுள்ளார். அந்த பெண்ணும் தனது வருங்கால மாமனார் மீது காதல் வயப்பட்டுள்ளார். இதனால் இருவரும் ஓடி போய் திருமணம் செய்துள்ளனர். தனக்கு மனைவியாக வேண்டிய பெண் சித்தியாக மாறியதை கண்டு அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதை விட்டால் வேறு பெண்ணா இல்லை என அவரது உறவினர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் தந்தை மற்றும் வருங்கால மனைவி செய்த துரோகத்தால் வாழ்க்கையை வெறுத்த இளைஞர் இனி திருமணம் செய்து கொள்ள மாட்டேன், யாருடனும் சேர மாட்டேன் என சாலை ஓரத்தில் தனியாக வசித்து வருகிறார்.
இது போல், சீனாவில் தனது மகன் காதலித்து வந்த பெண்ணை சீன வங்கியின் முன்னாள் தலைவர் லியு லியாங்கே, விலையுயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்து கவர்ந்து திருமணம் செய்துள்ளார்.