போப் ஆண்டவர் உடல்நிலை கவலைக்கிடம் - இறுதி ஊர்வல ஒத்திகைகள் தீவிரம்?
போப் ஆண்டவர் உயிர் பிழைப்பது கடினம் என தகவல் வெளியாகியுள்ளது.
போப் ஆண்டவர்
கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ்(88). இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் 10 வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரது செயலாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அவரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், பரிசோதனைகள் மூலம் அவருக்கு நுரையீரலில் இரட்டை நிமோனியா மற்றும் ஆஸ்துமா மூச்சுக்குழாய் அழற்சி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற உயிரினங்களின் கலவை அவரது சுவாசக் குழாயில் தொற்றை ஏற்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு
பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், சிக்கல்களின் அபாயத்தில் உள்ளார். அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வருவதால், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை.
போப் பிரான்சிஸ் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன. எனவே, போப் ஆண்டவரின் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.