போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு - சந்திப்புகள் ரத்து!

Pope Francis Vatican
By Sumathi Sep 24, 2024 09:30 AM GMT
Report

போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக பொதுமக்களுடனான சந்திப்புகளை ரத்து செய்துள்ளார்.

போப் பிரான்சிஸ்

இத்தாலியின் வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ்(86) வசித்து வருகிறார். கத்தோலிக்க மதத் தலைவராக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி அவர் உடல் நல பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்.

pope francis

2021ல் குடல் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதற்கு பின் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு தேவாலய கதவு திறந்திருக்கும் - சொன்னது போப் பிரான்சிஸ்!

தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு தேவாலய கதவு திறந்திருக்கும் - சொன்னது போப் பிரான்சிஸ்!

சந்திப்புகள் ரத்து

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தோனேசியா, பப்புவா நியூ கினி உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு 11 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து பெல்ஜியம், லக்சம்பர்க் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு - சந்திப்புகள் ரத்து! | Pope Francis Due Fever Cancels His Audiences Meet

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுடனான சந்திப்பை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

"லேசான காய்ச்சல் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வரும் நாட்களில் பயணம் காரணமாகவும், இன்று திட்டமிடப்பட்ட பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.