பெண் உறுப்பு சிதைப்பு கொடூர குற்றம் - ஆதங்கம் தெரிவித்த போப் பிரான்சிஸ்!

Pope Francis Saudi Arabia Crime
By Sumathi Nov 08, 2022 12:07 PM GMT
Report

பெண்ணின் பிறப்புறுப்பு சிதைப்பு என்பது நிறுத்தப்பட வெண்டிய குற்றம் என போப் தெரிவித்துள்ளார்.

 போப் பிரான்சிஸ்!

பஹ்ரைனுக்கு நான்கு நாள் பயணம் சென்ற போப் பிரான்சிஸ் விமானம் மூலம் ரோமுக்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உண்மையைச் சொல்ல வேண்டும். பெண்களின் உரிமைக்கான போராட்டம் என்பது தொடர் போராட்டம்.

பெண் உறுப்பு சிதைப்பு கொடூர குற்றம் - ஆதங்கம் தெரிவித்த போப் பிரான்சிஸ்! | Pope Female Genital Mutilation Crime Must Stop

பெண்கள் ஒரு வரம் என்பதால் இதற்காக தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. கடவுள் ஆண்களை படைத்து, விளையாடுவதற்காக செல்லப்பிராணியாக பெண்களை படைக்கவில்லை. ஆண், பெண் இருவரையும் சமமாகப் படைத்தார்.

பெண் உரிமை 

பெண்கள் அதிக பாத்திரங்களை வகிக்க அனுமதிக்கும் திறன் இல்லாத சமூகம் முன்னேறாது. பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு எதிராக சகிப்புத்தன்மை இருக்க கூடாது. அது ஒரு குற்ற செயல்" என்றார்.

ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் சுமார் 30 நாடுகளில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு வழக்கம் பின்பற்றப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுவது குறிப்பிடத்தக்கது.