தீவிர சிகிச்சை பிரிவில் உலக புகழ் பெற்ற பாடகி - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல பாடகி உடல்நல குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாப் பாடகி
பாப் இசை பாடல்களின் ராணியாக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் அமெரிக்க பாடகி மடோனா, இவருக்கு தற்போது 64 வயது. இவரது பாடல்களுக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இவர் 1982ம் ஆண்டு வெளியான எபோனிமஸ் எனும் இசை ஆல்பத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். இதன்மூலம் இவர் இசை அரசி என்ற பட்டத்தை பெற்றார். இவர் லைக் எ வெர்ஜின், ட்ரூ ப்ளூ, கிராமி விருது வென்ற ரே ஆஃப் லைட், லைக் எ பிரேயர், டேக் எ பவ், மியூசிக், ஹங் அப், ஃப்ரோஸன், 4 மினிட்ஸ் என பல ஆல்பங்கள் மடோனாவின் புகழை உலக முழுவதும் கொண்டு சென்றது.
சிகிச்சை பிரிவில்
இந்நிலையில், இவர் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது மேலாளர் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை மடோனாவுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது, ஆனால் அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கவனிப்பில் இருப்பார் என்று கூறியுள்ளனர். இந்தியாக தகவல் இவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.