வயது முதிர்வால் ராக்ஸ்டார் பாடகி ரமணியம்மாள் காலமானார் - ரசிகர்கள் கண்ணீர்

Death
By Thahir Apr 04, 2023 08:55 AM GMT
Report

 பிரபல பாடகி ராக்ஸ்டார் ராணியம்மாள் வயது முதிர்வால் காலமானார்.

பாடல் நிகழ்ச்சியில் அறிமுகம் 

43 ஆண்டு காலமாக வீட்டு வேலைகளை செய்து கடும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இவர் பாட்டு பாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளார்.

இதையறிந்த சிலர் அவரை ஜீ தமிழ் நடத்திய சரிகமப பாடல் நிகழ்ச்சியில் சேர்த்துவிட்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பல்வேறு பாடல்களை பாடிய ரமணியம்மாள் 2 ஆம் இடத்தை பிடித்தார்.

Rockstar singer Ramanyammal passed away

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டு பாடி பரிசை வென்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரை அனைவரும் ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்று அழைத்து வந்தனர்.

பல பாடல்களை பாடிய ரமணியம்மாள் 

இவர் பரத் நடிப்பில் வெளியான காதல் படத்தில் 'தண்டட்டி கருப்பாயி...' என்ற பாடலை பாடி அறிமுகமானவர். 'காத்தவராய சாமி...' (காத்தவராயன்) தொடர்ந்து 'வெள்ளைக்குதிரை...'(ஹரிதாஸ்), 'ரைஸ் ஆஃப் ஜூங்கா...'(ஜூங்கா), 'செங்கரட்டான் பாறையில...' (சண்டக்கோழி 2), 'இன்டர்நெட் பசங்க ...'(நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா), சூர்யாவின் காப்பான் படத்தில் சிறுக்கி எனத் தொடங்கும் இன்ட்ரோ பாடல் உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியுள்ளார்.

காலமானார்

இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.