இந்தியாவின் ஏழ்மையான மாநிலம் இதுதான் - தமிழகம் எந்த இடத்தில் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் ஏழ்மையான மாநிலங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
வறுமை நிலை
ஐநா மதிப்பீட்டின்படி, 2005-2006 மற்றும் 2019-2021க்கு இடையில், இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை சுமார் 41.5 கோடி குறைந்துள்ளது.
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வறுமை நிலை MPI மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. அந்த வகையில் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாடு (OPHI) ஆகியவற்றால் இதுகுறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாநில பட்டியல்
அதன்படி, வறுமை ஒழிப்பில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக பீகார் உள்ளது. தொடர்ந்து ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மேகாலயா உள்ளது.
இந்நிலையில் கோவா, ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வறுமை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் கேரளாவில் தான் வறுமை குறைவாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 0.71% மக்கள் மட்டுமே வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.
இதேபோல், கோவாவில் 3.76%, சிக்கிமில் 3.82%, தமிழ்நாட்டில் 4.89% மற்றும் பஞ்சாப்பில் 5.59% வறுமை நிலவுகிறது.