எவ்வளவு வேலை பார்த்தாலும் ஒரு நாள் சம்பளம் ரூ.50 தான்..உலகின் மிக ஏழ்மையான நாடு இதுவா?
உலகின் மிகவும் ஏழ்மையான நாட்டை குறித்து இந்த பதிவில் காணலாம்.
வறுமை நாடு
உலகமே பல வகையில் வளர்ச்சியை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கும் போது நாட்டில் வறுமை என்பது ஒரு மிக பெரிய பிரச்னையாக தான் இருக்கும்.
அந்த வரிசையில் உலகின் மிக ஏழ்மையான நாடாக கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள புருண்டி என்ற நாடு கண்டறியப்பட்டுள்ளது. உலகின் பணக்கார நாடுகளில் ஒரு சிலர் வறுமையில் இருப்பது உண்டு. ஆனால் இங்கு ஒரு நாடே வறுமையின் வலியில் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.
உலகின் ஏழை நாடுகளின் வரிசையில் புருண்டி முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 12 மில்லியன் அதாவது 1 கோடியே 20 லட்சம் ஆகும். இதில் 85 சதவீத மக்கள் மிக கடுமையான வறுமையில் வாழ்வது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது.
மக்கள் நிலவரம்
இந்த நாட்டை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா முன் ஒரு காலத்தில் ஆண்டன. பிறகு, சுதந்திரம் அடைந்த போதும் பொருளாதார அடிப்படையில் நல்ல நிலையில் தான் இருந்தது.
ஆனால்,1996 ஆம் ஆண்டில் இருந்து நிலைமை மோசமக தொடங்கியது. 1996 முதல் 2005 வரை நடந்த இனக்கலவரம் ஒன்றில் பல்லாயிரம் உயிர்களை இழந்து அந்நாட்டின் பொருளாதாரம் மெல்ல மெல்ல நாசமாகியது.
உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் முதலில் புருண்டியைத் தவிர, மடகாஸ்கர், சோமாலியா மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு உள்ளிட்ட பல நாடுகள் வறுமையுடன் போராடி வருகின்றன.
இந்நாட்டு மக்களின் ஆண்டு வருமானம் 180 டாலர்கள், இந்திய மதிப்பு படி 14 ஆயிரம் ரூபாய் தான்.
இங்கு 3 பேரில் ஒருவர் வேலையில்லாமல், நாள் முழுவதும் உழைத்தாலும், அன்றாட 50 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலை இருப்பதாக தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.