பிரபல நடிகையின் குளியலறை வீடியோ - முன்னாள் காதலன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு !
பிரபல நடிகையின் அரைநிர்வாண குளியலறை வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை வீடியோ
பாலிவுட்டில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவர் மீது எழுந்த சர்ச்சைகளுக்கெனவே பெயர் பெற்றவர் நடிகை பூனம் பாண்டே. அதாவது கடந்த பிப்ரவரி மாதம் பூனம் பாண்டே அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாக பதிவிடப்பட்டிருந்தது.
இதனை பார்த்த பலரும் உண்மை என் நம்பி பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்த நிலையில் மறுநாள் தான் உயிரோடு இருப்பதாகவும் வேண்டுமென்றே அவ்வாறு பதிவிட்டதாகவும் தெரிவித்தார்.மேலும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே அவ்வாறு பதிவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பூனம் பாண்டேவுக்கு ஏராளமானோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதன்படி, கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை அவர் மோசமாக பயன்படுத்தியிருப்பதாக டெல்லியில் சமூக ஆர்வலர் ஒருவர் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.
குற்றசாட்டு
முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அரை நிர்வாணக் கோலத்தில் குளியலறையில் பூனம் பாண்டே ஆட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று பலர் நினைத்துக்கொண்டு இருந்தனர்.
ஆனால், இதனை தனது முன்னாள் காதலன் தான் வெளியிட்டார் என பூனம் தற்போது கூறியுள்ளார். முன்னாள் காதலனுடன் வீட்டில் வசித்தபோது இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் பூனத்தை கொலை செய்ய முயன்றதால் அங்கு இருந்து தப்பியோடி வந்தவர் செல்போனை எடுக்க மறந்துளார்.
இதனை வைத்து முன்னாள் காதலன் மிரட்டியது மட்டுமல்லாமல் பூனத்தின் குளியலறை வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அவர் இந்தளவுக்கு கீழ்த்தரமான ஆள் என்று நினைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார் பூனம்.