32 வயதுதான்.. நடிகை பூனம் பாண்டே காலமானார் - வெளியான ஷாக்கிங் அறிவிப்பு!

Sumathi
in பிரபலங்கள்Report this article
பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே மரணமடைந்தார்.
பூனம் பாண்டே
பாலிவுட்டில் 2013ல் வெளியான நாஷா படத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை பதற வைத்தவர் பூனம் பாண்டே(32). லவ் இஸ் பாய்சன் எனும் கன்னட படத்திலும், மாலினி அண்ட் கோ எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
பின், சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் நிர்வாணமாக வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார். இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றால் மைதானத்திலேயே நிர்வாணமாக ஓடுவேன் என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி பிரபலமானார்.

“ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அடித்தார்” - பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
கருப்பை வாய் புற்றுநோய்
கருப்பை வாய் புற்றுநோய் (cervical cancer) பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது இன்ஸ்டா பக்கத்தில் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், இன்று காலை கர்ப்பை வாய் புற்றுநோய் காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சையடைந்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.