அந்த நடிகையை கர்ப்பமாக்கியது அரசியல்வாதி இல்லை இயக்குநர்தான் - பூனம் கவுர் குற்றச்சாட்டு
நடிகையை கர்ப்பமாக்கியது இயக்குநர்தான் என பூனம் கவுர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பூனம் கவுர்
நெஞ்சிருக்கும் வரை படம் மூலம் தமிழ் திரைப்படங்களில் அறிமுகமானவர் நடிகை பூனம் கவுர். மேலும் , உன்னை போல் ஒருவன், பயணம், வெடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் திரி விக்ரம் குறித்து இவர் கொடுத்த புகாருக்கு, தெலுங்கு நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்காதது குறித்து தனது ஆதங்கத்தை கடந்த மாதம் வெளிப்படுத்தியிருந்தார்.
பஞ்சாபி நடிகை
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள மற்றோரு பதிவில் பெயர் வெளியிடாமல் இயக்குநர் ஒருவரை குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பான பதிவில், பஞ்சாபி நடிகையை கர்ப்பமாக்கி கருவை கலைக்க செய்து அவரது சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் அல்ல. அந்த நடிகையை துன்புறுத்தியது இயக்குநர்தான்.
clarification -
— पूनम कौर ❤️ poonam kaur (@poonamkaurlal) October 9, 2024
it’s not the actor turned politician who impregnated n aborted the girl which ended her career - it’s the director who did it -maa involvement helped the half punjabi actor , I and actor/politician were pulled unnecessarily due political desperation #punjabigirl.
இந்த விவகாரத்தில் தெலுங்கு நடிகர் சங்கம் தலையிட்டு அந்த நடிகைக்கு பாதி உதவியை செய்தது. ஆனால் நானும் நடிகர் மற்றும் அரசியல்வாதியான அவரும் அரசியல் காரணங்களால் தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்டோம்” என பதிவிட்டுள்ளார்.
அவர் இயக்குநரின் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டாலும் அவரின் பதிவு தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.