ஆண்கள் சொல்லும் அந்த ஒரு வார்த்தை; நம்பவே கூடாது - அலெர்ட் செய்த பூனம் பஜ்வா!
ஆண்கள் கூறும் வார்த்தை குறித்த தகவலை நடிகை பூனம் பஜ்வா பகிர்ந்துள்ளார்.
பூனம் பஜ்வா
தமிழில் சேவல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. அதை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார். மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கு பிறகு திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில், வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களை அடிக்கடி பகிர்வார்.
அட்வைஸ்
தொடர்ந்து, போட்டோ ஷூட் செய்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். இதன்மூலம் தனது ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'Let me take you for coffee?' என ஆண்கள் innocent ஆக கேட்பது போல தான் இருக்கும், ஆனால் அதற்கு பல அர்த்தங்கள் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.