விளம்பரத்திற்காக சலூன் கடைக்காரர் செய்த வேலையை பாருங்க... - வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமா நடிகர், நடிகைகளின் தலையை மொட்டை அடித்தது போல் எடிட் செய்து சலூன் கடைக்காரர் ஒருவர் தனது கடையின் விளம்பரத்துக்காக வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சினிமா நடிகர்கள் மூலம் ஒரு பொருளை பிரபலப்படுத்தினால் அதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும்.
இதனால், பெரும்பாலும் கடை வீதிகளில் சினிமா நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை பயன்படுத்தி விளம்பரப்படுத்துவார்கள். துணிக்கடை, சலூன் கடை, நகைக்கடை, பட்டாசுக்கடை உள்ளிட்டவற்றில் அஜித், விஜய், ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், திரிஷா என ஏராளமான நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் இன்றளவும் விளம்பரத்துக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால், தற்போது வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சலூன் கடைக்காரர் ஒருவர் தனது கடையை விளம்பரப்படுத்துவதற்காக சிவகார்த்திகேயன், நடிகைகள் ஸ்ரீதிவ்யா, பூனம் பஜ்வா, சினேகா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் புகைப்படத்தை மொட்டை தலையுடன் இருக்கும்படி எடிட் செய்து பேனராக வைத்திருக்கிறார்.
இந்த வீடியோ வேளாங்கண்ணியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.