வயிற்றில் குழந்தையுடன் தலைகீழாக நின்ற பிரபல நடிகை - பகீர் வீடியோ

Pregnancy Viral Video Tamil Actress
By Sumathi Jan 09, 2023 10:48 AM GMT
Report

கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடிகை தலைகீழாக நின்றபடி யோகா செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

 பூஜா ராமச்சந்திரன்

தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பூஜா ராமச்சந்திரன். பின்னர் தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, நண்பேன்டா, காஞ்சனா 2, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், களம் உள்ளிட்ட படங்களிலும் பூஜா நடித்துள்ளார்.

வயிற்றில் குழந்தையுடன் தலைகீழாக நின்ற பிரபல நடிகை - பகீர் வீடியோ | Pooja Ramachandran Prenatal Yoga Video Goes Viral

இதற்கிடையில் விஜேவாக இருந்த கிரேக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் 2017ல் இருவருக்கும் விவகாரத்து ஆன நிலையில், நடிகர் ஜான் கொக்கனை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வேம்புலியாக நடித்தவர் தான் ஜான் கொக்கன்.

அதிர்ச்சி வீடியோ

இவர் சார்பட்டா படத்திற்கு முன்பே அஜித்தின் வீரம், பாகுபலி, கே.ஜி.எஃப் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பூஜா ராமச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், கர்ப்பமாக இருக்கும் நிலையில் தலைகீழாக நின்றபடி யோகா செய்கிறார். அதில் “மை லிட்டில் ஒன்” உன்னை சந்திப்பதற்காக தயாராக உள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.