கர்ப்பத்தை கணவருடன் ரொமாண்டிக்காக அறிவித்த பிரபல நடிகை!

Pregnancy Indian Actress Viral Photos
By Sumathi Nov 12, 2022 07:30 PM GMT
Report

நடிகை பூஹா ராமச்சந்திரன், கர்ப்பமாக இருப்பதை கணவருடன் ரொமாண்டிக் போட்டோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.

ஜான் கோக்கேன்

கேஜிஎஃப், பாகுபலி, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஜான் கோக்கேன். தெலுங்கு படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புளி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

கர்ப்பத்தை கணவருடன் ரொமாண்டிக்காக அறிவித்த பிரபல நடிகை! | Actress Pooja Ramachandran Is Pregnant

இதன்மூலம் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்திலும் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகையான மீரா வாசுதேவனை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

மனைவி கர்ப்பம்

அதனையடுத்து, பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரனை 2வதாக திருமணம் செய்து கொண்டார். பூஜாவுக்கும் இது 2வது திருமணம்தான்.

கர்ப்பத்தை கணவருடன் ரொமாண்டிக்காக அறிவித்த பிரபல நடிகை! | Actress Pooja Ramachandran Is Pregnant

அவ்வப்போது இருவரும் சமூக வலைதளங்களில் ஃபோட்டோ ஷூட் நடத்தி பகிர்ந்து வருவார்கள். இந்நிலையில், மனைவி பூஜா ராமச்சந்திரனுடன் லிப்லாக் கொடுத்துக் கொள்ளும் ஃபோட்டோவை பகிர்ந்து கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு திரையுலகினரும், ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.