சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு - இதை பாருங்க!

M K Stalin Government of Tamil Nadu DMK
By Vidhya Senthil Oct 09, 2024 06:43 AM GMT
Report

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படள்ளது.

 தொடர் விடுமுறை

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 09/10/2024 மற்றும் 10/10/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

holidays

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம்,

மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி,கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09/10/2024 (புதன்கிழமை), 10/10/2024 (வியாழக்கிழமை) மற்றும் 13/10/2024(வெள்ளிக் கிழமை) 210 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் முதல் பெண் கண்டக்டர் - யார் இந்த ரம்யா?

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் முதல் பெண் கண்டக்டர் - யார் இந்த ரம்யா?

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 09/10/2024 புதன்கிழமை 10/10/2024 வியாழக்கிழமை) மற்றும் 11/10/2024 வெள்ளிக்கிழமை அன்று 35 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 09/10/204 மற்றும் 10/10/2024 ஆகிய நாட்களுக்கு 110 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

போக்குவரத்துக் கழகம்

மேலும் , ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது .

இந்நிலையில், இந்த வார இறுதியில் புதன் கிழமை அன்று 20,410 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 3,743 பயணிகளும் சனிக்கிழமை 4,196 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 17,347 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

tn transport

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.