மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கினால் பணிநீக்கம் - அரசு போக்குவரத்துக் கழகம் கடும் எச்சரிக்கை...!

Tamil nadu
By Nandhini Oct 08, 2022 04:19 AM GMT
Report

மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கினால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அரசு போக்குவரத்துக் கழகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீப காலமாக சில அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

alcohol-tamilnadu-state-transport-corporation

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது

அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்திய நிலையில் பணிக்கு வருவது சட்டப்படி குற்றமாகும்.

ஓட்டுநர், நடத்துநர் மது அருந்திவிட்டு பணியாற்றினால் நம்பிக்கை குறைந்து அரசு பேருந்தில் பயணிப்பதை பயணிகள் தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது.

எனவே, மது அருந்தி விட்டு பணிக்கு வந்தால், போலீஸ் நடவடிக்கையுடன் அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.