பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் பூஜா ஹெக்டே? அவரே சொன்ன தகவல்!
பூஜா ஹெக்டே, ஒரு கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது.
பூஜா ஹெக்டே
தமிழில் முகமூடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. பின் மொஹெஞ்சதாரோ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் மும்பையில் வசிக்கும் ஒரு கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
கிரிக்கெட்டருடன் டேட்டிங்?
தற்போது இதற்கு விளக்கமளித்துள்ள பூஜா, "எனது முழு கவனமும் எனது வேலையில் மட்டுமே உள்ளது. நான் தனிமையில் இருக்கிறேன். எனது திருமணம் பற்றிய செய்திகளைப் படித்திருக்கிறேன்.
ஆனால் நான் அதில் கவனம் செலுத்துவதில்லை" என தெரிவித்துள்ளார். தற்போது அவர் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் நடித்து வருகிறார்.
மேலும், காஞ்சனா 4-ல் அவர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரவிராஜ் படுகொலை வழக்கில் ராஜபக்சர்களின் முன்னாள் சகாவுக்கு தொடர்பு : கசிந்த அதிர்ச்சி தகவல் IBC Tamil
