இறந்த மகன்; வீட்டிற்கு மீண்டும் அழைத்துவர வினோத பூஜை - மக்கள் பீதி!

Tamil nadu Death
By Sumathi Jun 22, 2023 05:45 AM GMT
Report

 இறந்த மகனின் ஆன்மாவை வீட்டிற்கு அழைத்து வர வினோத பூஜை செய்யப்பட்டுள்ளது.

இறந்த மகன்

திருப்பத்தூர், சொரக்காயல் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் நீண்ட வேண்டுதலால் குழந்தை பிறந்ததால் அவர்களை மிகவும் அன்போடு வளர்த்துள்ளனர்.

இறந்த மகன்; வீட்டிற்கு மீண்டும் அழைத்துவர வினோத பூஜை - மக்கள் பீதி! | Pooja By Parents For Dead Son In Tiruppathur

இந்நிலையில், கடந்த 2மாதங்களுக்கு முன் இளைய மகன் உதய் வசந்த், ஊரில் உள்ள ஏரிக்கரையில் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனால் குடும்பமே மன உளைச்சலில் இருந்துள்ளது.

வினோத பூஜை

தொடர்ந்து சாமியாரிடம் சென்று இதிலிருந்து மீள வழிகேட்டுள்ளனர். அப்போது அவர் கூறியபடி, தங்களது மகனை குடும்பத்துடன் சேர்த்து வைக்க தேவையான பூஜையை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

அதனையடுத்து, அமாவாசையை அடுத்த மூன்றாவது நாளில் பூங்கரகம் எடுத்து மஞ்சள், குங்குமம் தெளித்து வழி நெடுக பூ தூவி சென்று விபத்து நடந்த இடத்தில் உதய் வசந்தை குடும்பத்தினர் அழைத்துள்ளனர்.

நான்கு புறமும் எலுமிச்சை பழத்தை வெட்டி வீசி சாமி ஆடி அவரை அழைத்து வந்ததாக கூறி மீண்டும் அங்கிருந்து மேள தாளம் முழங்க வீடு திரும்பினர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ஏற்கெனவே பலமுறை இது போன்ற சடங்குகள் இங்கு நடந்திருக்கின்றன.

மகனின் மீதுள்ள பாசத்தால்தான் இந்த சடங்கு நடக்கிறது. இந்த ஆன்மாவை திருப்திப்படுத்த பூஜை செய்து அங்கிருந்து ஆன்மாவை சுடுகாட்டிற்கோ, வீட்டிற்கோ அழைத்து வருவார்கள். அப்படியாகத்தான் இந்த சடங்கும் நடந்திருக்கிறது இதில் பயப்பட வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளனர்.