இறந்த மகனின் விந்தணுவால் பிறந்த குழந்தை - பேத்தி மகளான சம்பவம்
இறந்த மகனின் விந்தணுவில் குழந்தை பிறந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
வாடகைத்தாய்
ஸ்பானிய தொலைக்காட்சி நடிகை அனா ஒப்ரெகன்(68). இவர் அனா சாண்ட்ரா என்ற பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தையை தத்தெடுத்தார். இது புளோரிடாவின் மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டு பெண்ணிற்கு பிறந்த குழந்தை.
வாடகைத் தாயான இவருக்கு, ஸ்பானிஷ நடிகையின் இறந்து போன மகனின் விந்தணு மூலம் பிறந்துள்ளது. தொடர்ந்து, ஒப்ரெகன் தனது சொந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்து எடுத்து, பேத்தியை மகளாக்கிக் கொண்டார்.
விந்தணுவில் குழந்தை
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "இந்தப் பெண் குழந்தை என் மகள் அல்ல, என் பேத்தி. இறந்து போன என் மகனின் கடைசி ஆசையை எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும்? குழந்தையை இழந்த பெற்றோருக்கு மட்டுமே இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு எனத் தெரிவித்து பத்திரிக்கை அட்டை படத்துக்காக குழந்தையுடன் போஸ் கொடுத்தார்.
இவருக்கு அலெஸ் லெகியோ(27) என்ற ஒரே ஒரு மகன் இருந்தார். புற்று நோயால் 2020 இல் இறந்தார். இறந்த மகணின் விந்தணு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இது சாத்தியமாகியுள்ளது.