என்னோட வாய்ஸ் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது : சர்ச்சை ஆடியோ குறித்து விளக்கம் கொடுத்த பொன்னையன்
அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சர்ச்சை ஆடியோ
எடப்பாடி பழனிசாமிக்கு 9 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரவாக இருப்பதாக பன்னீர் தரப்பு வெளியிட்ட ஆடியோவில் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைவர்களை விமர்சித்து, பொன்னையன் பேசுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட ஆடியோவால் சர்ச்சை உண்டாகியுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
விளக்கம் கொடுத்த பொன்னையன்
அப்போது அவர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனுடன் , அதிமுக மூத்த நிர்வாகியான பொன்னையன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், முன்னாள் அமைச்சர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதாக திமுகவை திட்டுவதில்லை, எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு குரலை மாற்றி பன்னீர் தரப்பு மோசடியில் ஈடுபட்டு வருவதாக பொன்னையன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதிமுக நிர்வாகி கோலப்பன் உள்பட யாரிடமும் நான் பேசவில்லை.
ஓபிஎஸ் -200 ஈபிஎஸ் -200 பாயும் வழக்குகள் , நெருக்கடியில் அதிமுக தொண்டர்கள்
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என் குரல் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது என்று சர்ச்சை ஆடியோ குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் விளக்கமளித்துள்ளார்.
ஆதாரம் உள்ளது
இந்நிலையில் இதை முற்றிலுமாக மறுத்துள்ள அதிமுக நிர்வாகி கோலப்பன், என்னுடன் பேசியது பொன்னையன் தான் என்றும் ,மிமிக்ரி செய்ய வேண்டிய அவசியமில்லை .ஜூலை 9ம் தேதி இரவு 9.59 மணிக்கு பொன்னையன் என்னுடன் பேசினார்: அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்று கூறியுள்ளார்.