அமைச்சர் மொன்முடி மனைவிக்கு சொந்தமான ஷோரூம் - கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்!
அமைச்சர் பொன்முடி மனைவியின் சொந்த நிருவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பைக் ஷோரூம்
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி பெயரில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.
அங்கு விற்பனையான வாகனங்களுக்கான தொகை இரண்டு லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில், வழக்கம் போல வாகன விற்பனை நிலையத்தை திறந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மர்ம நபர்கள் கைவரிசை
கடையின் பின்பக்க சன்னலில் கம்பி அறுக்கப்பட்டுள்ளது. உடனே ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த அவர்கள் சிசிடிவியை ஆய்வு செய்தனர். அதில், சன்னல் பக்க கம்பியை அறுத்து அதன் வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையன், ஒரு லாக்கரை எடுத்துச் சென்று வெளியே வைத்து உடைத்துள்ளான்.
அதில் இருந்து சாவிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் உள்ளே நுழைந்து மற்றொரு லாக்கர், பீரோ உள்ளிட்டவற்றை திறந்து கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளான். 3 லட்சம் ரூபாய் பணமும், வாடிக்கையாளர்களுக்கு பரிசாக வழங்க வைக்கப்பட்டிருந்த 6 கிராம் தங்க காசுகள் களவு போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொள்ளையன் வடமாநிலத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.