அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் வீட்டில் ED ரெய்டு..!

DMK Chennai K. Ponmudy Viluppuram
By Thahir Jul 17, 2023 03:37 AM GMT
Report

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு  சொந்தமான இடங்களில் அமலாக்கதுறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

அமைச்சர் வீட்டில் ரெய்டு 

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் வீட்டில் ED ரெய்டு..! | Ed Raid At Minister Ponmudy House

சென்னையில் உள்ள வீடு அலுவலகங்கள், விழுப்புரம் பகுதியில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சோதனை எந்த வழக்கின் கீழ் அல்லது புகாரின் பெயரில் நடைபெறுகிறது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

இதற்கு முன்னர் ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.