மாமன்னன் பாணியில் பொன்முடி; அமைச்சர் வீட்டில் நடந்தது இதுதான் - முன்னாள் எம்எல்ஏ விளக்கம்!

Tamil nadu Viral Photos K. Ponmudy
By Sumathi Sep 29, 2023 05:24 AM GMT
Report

திமுக நிர்வாகிகளை அமர வைக்காமல் நிறுத்தி வைத்தபடி பேசியதாக புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை ஃபோட்டோ

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகின்ற 1-ம் தேதி விழுப்புரம் மத்திய மண்டலம் சார்பில் பட்டிமன்றத்தை நடத்த உள்ளன. இதற்கான ஆலோசனைகளைப் பெற ஆதி திராவிடர் நலக் குழு இணை செயலாளர்கள் விபி ராஜன்,

மாமன்னன் பாணியில் பொன்முடி; அமைச்சர் வீட்டில் நடந்தது இதுதான் - முன்னாள் எம்எல்ஏ விளக்கம்! | Ponmudi Has Been Accused For Controversy

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்களை நிற்கவைத்து பேசி அனுப்பியதாக புகைப்படம் ஒன்று பரவி வைரலானது.

விளக்கம்

இந்நிலையில், இதுகுறித்து பேசிய முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் "கடந்த 26ம் தேதி நானும், வி.பி ராஜனும், அமைச்சர் பொன்முடியை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றோம். அப்போது அவர் காலில் காயமடைந்து இருந்ததால் கட்டுப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அமைச்சர் பொன்முடி சந்திப்பு!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அமைச்சர் பொன்முடி சந்திப்பு!!

அதை வி.பி ராஜன் குனிந்து பார்த்து விசாரித்தபோது எடுக்கப்பட்ட படம் அது. அமைச்சர் வீட்டில் உணவருந்திவிட்டுதான் நாங்கள் வந்தோம். சில விஷயங்களில் உண்மையை தெரிந்து கொள்ளாமல் வெளியே சொல்வது தவறு. இதற்கு மேல் என்னிடம் விளக்கம் கேட்க வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.