பொன்முடியின் 3 ஆண்டு சிறை வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

India Supreme Court of India K. Ponmudy
By Karthick Jan 12, 2024 10:48 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பொன்முடி வழக்கு

கடந்த 2006 ஆம் ஆண்டின் திமுக ஆட்சியின் போது, கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ponmudi-case-sc-decision-in-summoning

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, 2016-ஆம் ஏப்ரலில் இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

விலக்கு

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பொன்முடி, 64.90 சதவீத அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக கூறி அவருக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

ponmudi-case-sc-decision-in-summoning

மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உடல் நிலை சரியில்லையா..? முதல் முறையாக சொன்ன முதல்வர் முக ஸ்டாலின்..!

உடல் நிலை சரியில்லையா..? முதல் முறையாக சொன்ன முதல்வர் முக ஸ்டாலின்..!

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்பதிலிருந்து விலக்கு அளித்தனர்.