பொங்கல் சிறப்பு ரயில்: 7 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் - பயணிகள் ஏமாற்றம்
சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.
சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் எப்போதும் விடப்படும். அதன்படி, தாம்பரம்-நெல்லை, தாம்பரம்-நாகர்கோவில், கொச்சுவேலி-தாம்பரம், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையே 5 சிறப்பு ரெயில்களும் மறு மார்க்கமாக 5 சிறப்பு ரயில்களும் என மொத்தம் 10 சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளன.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் சிறப்பு ரெயில்களுக்கான அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன.
7 நிமிடங்களில்..
கவுண்டரில் நின்ற 5 சதவீதம் பேருக்கு மட்டுமே டிக்கெட் கிடைத்தது. கவுண்டரில் காத்து நின்ற 95 சதவீதம் பேர் டிக்கெட் கிடைக்காமல் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று டிக்கெட் புக் செய்ய முடியாதவர்கள் வரும் 11 ஆம் தேதி தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.