ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் ரூ.500 வாங்கி ரூ.20 கொடுத்ததாக ஏமாற்றிய ஊழியர்...!

Viral Video Delhi
By Nandhini Nov 29, 2022 06:23 AM GMT
Report

டெல்லியில் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் ரூ.500 வாங்கி ரூ.20 கொடுத்ததாக ஏமாற்றிய ஊழியரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.500 வாங்கி ரூ.20 கொடுத்ததாக ஏமாற்றிய ஊழியர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், டெல்லி, நிசாமுதீன் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் ரூ.125 டிக்கெட் எடுக்க வந்த பயணியிடம், ரூ.500 வாங்கிக் கொண்டு அதை தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு, வெறும் ரூ.20 மட்டுமே கொடுத்ததாக பயணியை ஊழியர் ஒருவர் ஏமாற்றினார்.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் யாருக்கும் தெரியாமல் எடுத்தனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிகன்கள் பலர் எனக்கும் இது மாதிரியான ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில், ஊழியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

delhi-nizamuddin-station-viral-video-500-notes