பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வந்தாச்சு...அப்போ ரூ.1000..?
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அனைவரின் கவனமும் பொங்கல் பரிசு தொகை மீது திரும்பியுள்ளது.
பொங்கல் பரிசு
தொகை வரும் பொங்கலை முன்னிட்டு அரசு சார்பில், பொங்கல் பரிசு பொருட்கள் மட்டுமில்லாமல் ரூ.1000 ரொக்க பணமும் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால், இந்தாண்டு பெரும் சந்தேக கேள்விகளை எழுப்பியுள்ள ஒன்றாக அமைய காரணம் இந்த வருடம் வெள்ள பாதிப்புகள் மற்றும் அதற்காக அரசு அறிவித்த நிவாரணமாகும்.
டோக்கன் ரெடி..?
இதற்கிடையில் தான், தற்போது பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கன் தயாராகியுள்ளது. ஆனால் தற்போது ரூ.1000 குறித்தான எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
அதே நேரத்தில், 1000 ரூபாய் குறித்தான தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக வெளிவரும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் ஆளும் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடிகளை அளித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.