பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது கிடைக்கும்? 3,000 ரூபாய்? விவரம் இதோ..

Thai Pongal Tamil nadu DMK Festival
By Sumathi Dec 22, 2025 08:13 AM GMT
Report

2026 பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசு ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு பரிசுத் தொகுப்புடன் 3,000 ரூபாய் ரொக்கமும் வழங்க திமுக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பொங்கல் பண்டிகை

இந்த பரிசு தொகுப்பு விநியோகம் வரும் ஜனவரி 2வது வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது கிடைக்கும்? 3,000 ரூபாய்? விவரம் இதோ.. | Pongal Gift Package 2026 Tamilnadu Details

அதற்கான டோக்கன் விநியோகம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குவதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் செயல்படுவார்கள்.

பரிசு தொகுப்பு 

இந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் நேரடியாக ரேஷன் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்? முழு விவரம் இதோ

எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்? முழு விவரம் இதோ

இந்த பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு, இலவச வேட்டி மற்றும் சேலை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்டவை இடம்பெறும் என்கின்றனர்.

ஜனவரி 10ஆம் தேதிக்குள் பெரும்பாலான ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்கமும் சென்றடையும் என தகவல் வெளியாகியுள்ளது.