பொங்கல் சிறப்பு தொகுப்பு எப்போது கிடைக்கும்?ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கொடுத்த அப்டேட்- விவரம் இதோ!
பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான அறிவிப்பு குறித்து ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
பொங்கல் சிறப்புத் தொகுப்பு
பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் பொருள்கள் வழங்கப்படும். கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் 1000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது.
அந்த வகையில், இந்தாண்டும் அதே பொருள்கள் வழங்கப்படுமா பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது 37 ஆயிரம் ரேஷன் கடைகள் தமிழ்நாட்டில் உள்ளன. கூட்டுறவு மற்றும் உணவு நமது இரு கண்களாக உள்ளது. ஒன்றிய அரசு கொண்டுவந்த தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் மூலம் இதுவரை 1.14 கோடி பேர் அதில் பயனடைந்து உள்ளனர். தொடர்ந்து இந்த திட்டத்தைத் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்
அதுமட்டுமில்லாமல் 1.04 கோடி பேருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றைக் கொடுக்கிறோம். அரிசி 3 மாதத்திற்குத் தேவையான இருப்பு உள்ளது என்றும் அதே போல் பருப்பும் தயார் நிலையில் உள்ளது என்று கூறினார்.
2.25 ரேஷன் கார்டுகள் இருப்பதாகவும் தற்போது 1.54 புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பொங்கல் சிறப்புத் தொகுப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் வரும் வாரத்தில் வெளியிடுவார் என்றும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்று கூறினார்.