பொங்கல் பரிசு தொகுப்பு - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

Thai Pongal Government of Tamil Nadu K. R. Periyakaruppan
By Karthikraja Jan 19, 2025 02:47 AM GMT
Report

பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கும் பணி 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு

2025 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கடந்த 9 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

பொங்கல் பரிசு தொகுப்பு 2025

தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பொங்கல் பரிசில் ரூ.1000 ஏன் இடம் பெறவில்லை? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

பொங்கல் பரிசில் ரூ.1000 ஏன் இடம் பெறவில்லை? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

நீட்டிப்பு

இதற்காக சுமார் 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று (18.01.2025) வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 87 லட்சத்து 14,464 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பரிசு தொகுப்பு 2025

இதன்மூலம் 85 % பணிகள் நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி வரும் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார்.