பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 - சட்டசபையில் முதலமைச்சர் அறிவிக்க வாய்ப்பு!
பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்பட வாய்ப்பு குறைவு என்ற நிலையே உள்ளது.
பொங்கல் பரிசு
பொங்கல் பரிசு தொடர்பான முக்கியமான அறிவிப்பை தமிழக வெளியிட்டு உள்ளது. அதன்படி பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிதி நிலவரங்களை காரணம் காட்டி இந்த முறை தமிழக அரசு ரூ.1000 பணம் வழங்கவில்லை. இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
ரூ.1000 கிடைக்குமா?
எனவே, முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசாக ரூ. 1000 சட்டசபை கூட்டத்தொடரிலேயே அறிவிப்பார் என தகவல்கள் வெளியானது. ஆனால் இப்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்பட வாய்ப்பு குறைவு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, இதுகுறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், மகளிர் உரிமை தொகை, புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது.
இதனால் நிதி நெருக்கடி அதிகமாக உள்ளது. இதனை சமாளிக்கவே அரசு இந்த முறை பொங்கலுக்கு ரொக்க பரிசு கொடுக்காமல் போனது என்று கூறப்படுகிறது.