களைகட்டும் பொங்கல்: சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
பொங்கலை முன்னிட்டு ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை ஜன.15- ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து, மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று பெரும்பாலான தமிழர்கள் வீடுகளில் இறைச்சி உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படுவது வழக்கம்.
இதனால், ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, மீன் இறைச்சி கடைகளில் கும்பல் அலைமோதும். அந்த வகையில், விற்பனை செய்வதற்காக ஆடுகளை வாங்கும் பணியில் கடந்த ஒரு வாரமாக இறைச்சிக் கடைக்காரர்கள், ஆட்டு வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆடுகள் விற்பனை
அதன்படி, நாமக்கல்லில் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 1.5 கோடி ரூபாய்க்கும், ஆரணி கேளூர் மாட்டுச்சந்தையில் 2 கோடிக்கும், பாவூர்சத்திரத்தில் சுமார் 2 கோடி அளவிற்கும், மதுரை திருமங்கலத்தில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆடு ஒன்று ரூ.13 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்க்கப்பட்டுள்ளது. ஆட்டு இறைச்சியின் விலை மாட்டுப் பொங்கல் தினத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.