புதுச்சேரியிலும் திமுக ஆட்சி மலரும் - முதலமைச்சர் திட்டவட்டம்!
திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கும் தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி திமுக அவைத்தலைவர் சிவக்குமார் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்தினை தெரிவித்தார். அப்போது பேசியதில், "புதுச்சேரி மீது எனக்கு தனி பாசம் உண்டு . தமிழ்நாட்டையும், புதுச்சேரியையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொள்கை உரம் பெற்ற ஊர் புதுச்சேரி. புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. இங்கு மதவாத ஆட்சி உருவாக விடக்கூடாது. தற்போது நடைபெறும் ஆட்சி மக்களுக்கானது அல்ல. புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலரும்.
திராவிட மாடல் தேவை
புதுச்சேரி முதல்வர் நல்லவர் தான், ஆனால் வல்லவராகவும் இருக்க வேண்டும். நமக்குள் போட்டி இருக்க வேண்டும், பொறாமை இருக்க கூடாது. திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வருவது தற்போதைய தேவை.
அந்த ஆசை எனக்கும் உள்ளது. புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி மக்களுக்காக நடைபெறுகிறதா? எந்தவிதத்திலும், எந்த சூழலிலும் மக்களோடு துணை நின்று பணியாற்றுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.