சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
சூப்பர் ஸ்டால் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டாருக்கு இன்று பிறந்த நாள்
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த. தனது அசாத்திய திறமையால் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து உலக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள ஒரு தமிழ் நடிகர்.
தமிழ் சினிமாவில் 100 கோடிகளை வசூலித்து காட்டியது இவரது திரைப்படம். இவர் நடித்த படையப்பா, பாட்ஷா, பாபா உள்ளிட்ட திரைப்படங்களும் இன்றைய தலைமுறை ரசித்து பார்க்க கூடிய திரைப்படங்களாக இருந்து வருகிறது.
பல ஆயிரம் ரசிகர்களை கொண்டுள்ள ரஜினிகாந்த் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனத ட்விட்டர் பக்கத்தில்,
என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) December 12, 2022
நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.