பலதார திருமணம்: முஸ்லீம்களை விட கிறிஸ்தவர்கள் தான் அதிகம் - ஆய்வில் தகவல்!
முஸ்லிம்களை விட கிறிஸ்தவர்களில் பலதார திருமணம் அதிகம் செய்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பலதார திருமணம்
ஐஐபிஎஸ் சார்பில், கடந்த 2019 முதல் 2021-ம் ஆண்டிற்கு இடையில் திருமணமான பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதனை ஐஐபிஎஸ் பேராசிரியர்கள் ஹரிஹர் சாஹு, ஆர்.நாகராஜன் மற்றும் சைத்தாலி மண்டல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதன்படி, பலதாரத் திருமணங்கள் செய்த கிறிஸ்தவர்கள் 2.1 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளனர். இரண்டாம் நிலையில் முஸ்லிம்கள் 1.9 சதவிகிதம் பலதார திருமணங்கள் புரிந்துள்ளனர். இந்துக்கள் 1.3 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
ஆய்வு தகவல்
சீக்கியர்களில் மிகக் குறைவான 0.5 சதவிகிதம் பலதாரத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. புத்த மதத்தினரில் 1.3% மற்றும் பெயர் குறிப்பிடாத இதர சமூகத்தினரில் 2.5% எனவும் உள்ளன. தென் மாநிலங்களில் அதிகமாக தெலங்கானாவில் 2.9%, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் தலா 2.4%, தமிழ்நாட்டில் 2 சதவிகிதங்களாக உள்ளன.
அதில் அதிகம் இந்துக்களே இருப்பதாக கூறப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் பழங்குடியினத்தவர்களாக இருப்பதால் அங்கு பலதார திருமணம் அதிகம் உள்ளது. சட்டப்படி அனுமதி இருந்தும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாநிலங்களிலும் பலதாரத் திருமணம் குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.