ஐஸ்வர்யா அர்ஜுன் திருமண வரவேற்பு - கலந்து கொண்ட முக்கிய அரசியல் தலைவர்கள்!

M K Stalin Wedding Marriage Umapathy Ramaiah Aishwarya Arjun
By Karthikraja Jun 15, 2024 08:35 AM GMT
Report

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா - உமாபதி திருமண வரவேற்பில் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

திருமண வரவேற்பு

நடிகர் அர்ஜுன் மகளான ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் கடந்த ஜூன் 10 ம் தேதி அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. 

asihwarya arjun umapathy marriage

இந்நிலையில் அவர்களுடைய திருமண வரவேற்பு சென்னை லீலா பேலஸில் ஜூன் 14 ம் தேதி இரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 

"அது மட்டும் கூடாது"!!ஐஸ்வர்யாவிற்கு என்ன கண்டிஷன் தம்பி ராமையா போட்டார் தெரியுமா??

"அது மட்டும் கூடாது"!!ஐஸ்வர்யாவிற்கு என்ன கண்டிஷன் தம்பி ராமையா போட்டார் தெரியுமா??

மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு பசுமை பூங்கோத்தை கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.

mk stalin aishwarya arjun reception

இதன்பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பூங்கோத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். அங்கு வந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோரை மனமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சௌமியா அன்புமணியுடன் கலந்து கொண்டார். உடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டார்.

சீமான்

இதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

seeman at aishwarya arjun reception

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

மேலும், ரஜினிகாந்த், பாரதிராஜா, டி ராஜேந்திரன், சசிகுமார், சத்யராஜ், பிரபு, வடிவேல், சுந்தர் சி, பிரபுதேவா ,விஜய் சேதுபதி, சினேகா மற்றும் பிரசன்னா உள்ளிட்ட திறத்துறையினரும் கலந்து கொண்டனர்.

இவர்களது திருமண வரவேற்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.