கோயிலில் உள்ளாடையுடன் இருந்த போலீசார்; அதுவும் பெண்கள் முன்பு - பகீர் காட்சி!
கோயிலில் உள்ளாடை மட்டும் அணிந்து செல்போன் பார்க்கும் போலீசார் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார்
உத்தரப்பிரதேச மாநிலம் கொலுஹகடா கிராமத்தில் சந்திரிகா மாதா கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயில் அருகில் கொலுஹாகாட் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற கவத் கீதை கதாகாலட்சபே நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அப்போது காவல் நிலைய முற்றத்தில் புறக்காவல் நிலைய பொறுப்பாளரான ராம்நிவாஸ் யாதவ் என்ற போலீஸ்காரர் உள்ளாடை மட்டும் அணிந்து சேரில் அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது.
பகீர் காட்சி
செல்போனில் படம் பார்த்தப்படி இருக்கும் ராம்நிவாஸ், அரை நிர்வாண நிலையில் இருப்பதைக் கண்ட ஒருவர் அவரிடம், உடை அணியுமாறு கேட்டுள்ளார். இருப்பினும் செல்போனில் மூழ்கியிருந்த காரணத்தால் அவர் சொன்னதை கண்டுகொள்ளவில்லை.
இது தொடர்பாக ராம்நிவாஸ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் துறை கண்காணிப்பளார் சித்தார்த் சங்கர் மீனா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிகாபூர் சிஓ மாயா ராய்க்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, ராம்நிவாஸ் யாதவ், அச்சல்கஞ்ச் காவல் நிலையத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.
காலை 9 மணியளவில் ராம்நிவாஸ் யாதவ் குளிக்கச் சென்ற போது திடீரென மின்சாரம் பாய்ந்ததாலும், தண்ணீர் இல்லாததால் உள்ளாடையுடன் உட்கார நேரிட்டதாக போலீஸார் கூறினர்.