மெரினா சாலையில் அரை நிர்வாணமாக மறியல் செய்த பெண்ணால் பரபரப்பு
சென்னை மெரினா கடற்கரை சாலையில் அரை நிர்வாணமாக மறியல் செய்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு 10.30 மணி அளவில் கண்ணகி சிலை அருகே குடிபோதையில் தனது கணவருடன் சேர்ந்து அரை நிர்வாணமாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் இப்பெண் சாலை முழுவதும் அங்குமிங்குமாக தெரிந்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அங்கு காவல் துறையிடமும் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இப்பெண் மெரினா சாலையோரம் பகுதிகளில் தனது கணவருடன் தங்கி வருவதாகவும், தனது கணவரை யாரோ ஒருவர் தாக்கி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் குடிபோதையில் மறியல் செய்தது தெரியவந்தது.