ஓடும் ரயிலில் தள்ளி விடப்பட்ட காவலர் - நள்ளிரவில் நடந்த கொடூரம்!
விருதுநகர் அருகே செல்வனுக்காக ஓடும் ரயிலிருந்து காவலர் ஒருவர் தள்ளி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தென்காசி
தென்காசி மாவட்டம் குலசேகரக் கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் . இவர் தலைமைக் காவலராக மயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வருகிறார்.
விடுமுறை என்பதால் நேற்று நள்ளிரவு சென்னை -திருச்செந்தூர் ரயிலில் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார் .இந்த நிலையில் ரயிலில் அமர்வதற்கு இடம் இல்லாததால் படியில் அமர்ந்து பயணித்து வந்தாக கூறப்படுகிறது .
அதிர்ச்சி சம்பவம்
அப்போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ப நபர்கள் காவலர் ஜெயக்குமார் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். விருதுநகர் அருகே காட்டுப்புத்தூர் என்ற பகுதியில் படுகாயங்களுடன் மயக்க நிலையில் தண்டவாளத்தில் கிடந்துள்ளார்.
அதிகாலையில் அந்த வழியாக வந்த அப்பகுதி கிராம மக்கள் அவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதனையடுத்து அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சேர்த்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.