என்னை அடித்து, உதைத்து வீடியோ எடுத்துள்ளனர்- பெண் காவலர் மீது சவுக்கு சங்கர் புகார்!
பெண் காவலரை அவதூறாக பேசிய குற்றத்திற்கு யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர்
யூடியூப் சமூகவலைதளத்தில் அரசியல் விமர்சகராக இருந்த சவுக்கு சங்கர் பெண் காவலர்களை குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது தேனீ வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.தற்போது கோவை மத்திய சிறையில், அடைக்கப்பட்டுள்ள அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகள் வந்த வண்ண ம் உள்ளன.
அதன் காரணமாக அவர் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்துள்ளது. தொடர்ந்த்து அவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. இதற்காக கோவையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் தலைமையிலான போலீசார் வேனில் அழைத்து வந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெண் காவலர்
இந்த நிலையில், திருச்சிக்கு அழைத்து செல்லும்போது வழியில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சவுக்கு சங்கர் ஒரு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். காவலர்கள் தன்னை வேனில் வைத்து அடித்து மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்ததாக சவுக்கு சங்கர் புகார் தெரிவித்துள்ளார்.
போலீசார் தாக்கியதாக சவுக்கு சங்கர் கூறிய நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சவுக்கு சங்கருக்கு காயம் உள்ளதா என்பதை மருத்துவர்கள் சோதனை செய்ய நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.