Tuesday, Jul 15, 2025

ஓடும் ரயிலில் படு மோசமாக நடந்த காவலர் - பெண் செய்த செயலால் தலைதெறிக்க ஓட்டம்!

Chennai Crime
By Sumathi 2 years ago
Report

ரயிலில் பெண் ஒருவரிடம் காவலர் மோசமாக நடந்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவலரின் செயல் 

சென்னை, கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பெருங்களத்தூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

policeman-misbehave-front-of-woman

இவர் கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை காட்டி மோசமாக நடந்துக்கொண்டுள்ளார்.

தலைக்கேறிய கஞ்சா போதை...சென்னையில் காவலரை ஓடஓட விரட்டிய இளைஞர்கள்

தலைக்கேறிய கஞ்சா போதை...சென்னையில் காவலரை ஓடஓட விரட்டிய இளைஞர்கள்

பெண் புகார்

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் உடனே அந்த நபரை வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்ட அந்த நபர் பல்லாவரம் ரயில் நிலையத்தில் இறங்கி தப்பித்து ஓடியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

chennai

அதில், தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வரும் கருணாகரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். காவலரே இவ்வாறு நடந்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.