மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத் தான் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு இல்லையா? - ஜோதிமணி

Indian National Congress BJP Narendra Modi Government Of India Kerala
By Thahir 2 மாதங்கள் முன்

மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத் தான் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு இல்லையா? என எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய அரசுக்கு பொறுப்பு இல்லையா?

கடந்த 2018-2019 கேரளா பெருவெள்ளத்தின் போது நிவாரணமாக வழங்கப்பட்ட 89 டன் அரிசிக்கான தொகை 205.81 கோடியை தரச்சொல்லி கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியிருந்தது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எம்.பி. ஜோதிமணி, மோடியின் நண்பர்கள் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்தபின் நாட்டை விட்டு பத்திரமாக அனுப்பிவைக்கப்படுவார்கள்.ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தை திருப்பிக் கேட்கும் ஒன்றிய அரசு! இப்படியொரு மோசமான, இரக்கமற்ற அரசை இந்தியா கண்டதில்லை.

is-the-union-government-not-responsible-jothimani

இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத் தான் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு இல்லையா? பிறகெதற்கு வரியென்ற பெயரில் கொள்ளை அடிக்கிறது மோடி அரசு? வரியையும்,மக்களையும் மாநில அரசே பார்த்துக்கொள்ளலாமே.

வரி என்ற பெயரில் கொள்ளை அடித்துவிட்டு, மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் கொடுக்காமல் வயிற்றில்.அடிக்கும் மோடி அரசை நினைத்தால் " வானம் பொழிகிறது,பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்கவேண்டும் கிஸ்தி ..." எனும் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் தான் நினைவுக்கு வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.