லண்டனுக்கு சென்ற மனைவி; காவலர் எடுத்த விபரீத முடிவு - என்ன நடந்தது?

Tamil nadu Coimbatore
By Jiyath Apr 22, 2024 10:42 AM GMT
Report

காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைமை காவலர் 

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புலனாய்வு பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் பாலகுமார் (38). இவரது மனைவி சுமதி என்பவர் பிரபல நட்சத்திர உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

லண்டனுக்கு சென்ற மனைவி; காவலர் எடுத்த விபரீத முடிவு - என்ன நடந்தது? | Policeman Commits Suicide In Coimbatore

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சுமதிதிக்கு பதவி உயர்வு கிடைத்து லண்டனுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலகுமார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இதனால் தனது 2 குழந்தைகளையும் சுமதியின் அப்பா வீட்டில் விட்டுள்ளனர்.

மனைவியுடன் மட்டும் தாம்பத்திய உறவு கொள்ள முடியாத கணவன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மனைவியுடன் மட்டும் தாம்பத்திய உறவு கொள்ள முடியாத கணவன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தற்கொலை 

இதனிடையே செல்போனில் பாலகுமாருக்கும், சுமதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய பாலகுமார், பின்னர் பணிக்கு திரும்பவில்லை. இதையடுத்து காவல்துறையினர் அவரின் வீட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

லண்டனுக்கு சென்ற மனைவி; காவலர் எடுத்த விபரீத முடிவு - என்ன நடந்தது? | Policeman Commits Suicide In Coimbatore

அப்போது பாலகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தற்கொலை குறிப்பில், மனைவியுடன் பேச முடியவில்லை என்பதால், இந்த முடிவை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.