மருத்துவமனைக்குள் பாய்ந்த ஜீப்; ICU வரை ஓட்டிச் சென்ற போலீஸார் - ஷாக் வீடியோ!
மருத்துவமனைக்குள் வாகனத்தை போலீஸார் ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனைக்குள் ஜீப்
உத்தராகண்ட், ரிஷிகேஷில் எய்ம்ஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பயிற்சி மருத்துவராக பெண் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அங்கேயே சதீஷ்குமார் என்பவர் நர்சிங் அலுவலராக இருந்துள்ளார்.
இவர் அந்த பெண்ணை தவறான நோக்கத்தோடு சீண்டியதாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில், அவர் பாலியல் ரீதியில் தொல்லைத் தந்தது உறுதியானது.
அதிர்ச்சி வீடியோ
அதனையடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரை பணியில் அமர்த்திய நர்சிங் மேற்பார்வையாளர் சினோஜ் என்பவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Uttarakhand Police entering AIIMS Rishikesh to arrest a nursing officer accused of molestation. pic.twitter.com/KD94jWBF68
— Cow Momma (@Cow__Momma) May 23, 2024
இதற்கிடையில் சதீஷ்குமாரை போலீஸார் கைது செய்ய அங்கிருந்த நோயாளிகளின் படுக்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு, போலீஸ் வாகனத்தை உள்ளே ஓட்டி வந்துள்ளனர். பின்னர் சதீஷ்குமாரை அவர்கள் கைது செய்து அழைத்துச் செல்லும் போது,
ஏராளமான பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அந்த வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரவி வருகிறது.