அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - நோயாளிகள் அவசரமாக வெளியேற்றம்!
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து
சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு அருகே மேல் மாடியில் தீ பிடித்தது. ஆபரேஷன் தியேட்டர் அருகே உள்ள ஏசி எந்திரத்தில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக புகைமூட்டம் எழுந்து அவசர சிகிச்சை வார்டு பகுதிகளில் பரவத் தொடங்கியது. அதனையடுத்து, உடனே ஊழியர்களும் , நோயாளிகளுடன் தங்கி இருந்தவர்களும் உடனடியாக நோயாளிகளை வெளியே கொண்டு வந்தனர்.
நோயாளிகள் வெளியேற்றம்
இதற்கிடையில், தீயணைப்பு படை வீரர்களும் மருத்துவமனைக்குள் வந்து தீ , புகை மூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து மருத்துவமனை டீன் மணி மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்ளிட்டோர் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்தனர். வெளியேற்றப்பட்ட நோயாளிகள் அருகே உள்ள கண்ணாடி மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை தொடங்கி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.