ஆடைகளை களைத்து போலீஸ் அட்டூழியம் - பெண் தொழிலதிபருக்கு நேர்ந்த அவலம்!
பெண் தொழிலதிபரை ஆடைகளை களைத்து அவமதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தொழிலதிபர்
பெங்களூருவில் உள்ள பத்மநாபா நகரை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஜீவா (33). இவரிடம் கர்நாடகா போவி மேம்பாட்டு ஆணையத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் போவி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சிக்கபள்ளாப்பூர், தொட்டபள்ளாபூர், கலபுரகி என பல இடங்களில் வழக்குகள் பதிவானது. இதனிடையே இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே இது குறித்து கடந்த 14ம் ஜீவாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், கடந்த வாரம் இரவு தனது வீட்டில் ஜீவா தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்தது. ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு 11 பக்க தற்கொலை கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில்,‘‘கடந்த 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன்.
அவலம்
அப்போது சிறப்பு புலனாய்வுபிரிவின் துணை காவல் கண்காணிப்பாளர் கனகலட்சுமி என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். விசாரணையின் போது எனது ஆடைகளை களைந்து, சயனைடு கொண்டு வந்திருக்கிறேனா? என்று கேட்டார்.
மேலும், இவ்வழக்கில் இருந்து என்னை விடுவிக்க ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டார். அவர் அளித்த ஆவணங்களில் கையெழுத்திட மறுத்ததால் கடுமையாக மிரட்டினார்” என குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜீவாவின் சகோதரி சங்கீதா பனசங்கரி போலீசாரிடம் புகார் அளித்தார். தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஜீவாவின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த புகார் குறித்து விசாரித்த போலீஸார், ‘‘பெண் தொழிலதிபரை மிரட்டிய சிறப்பு புலனாய்வு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கனகலட்சுமி மீது ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7, பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 108 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.