பிரமாண்டமாய் வாழ்ந்த தொழிலதிபர் குடும்பம்; விரக்தியில் தற்கொலை - உருக்கமான கடைசி கடிதம்!
கோவையில் தொழிலதிபர் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர்
கோவை தெலுங்கு பாளையம் மணி ரைஸ் மில் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(46). தொழில் அதிபரான ராமச்சந்திரன் மது பாட்டில்களுக்கான மூடிகளை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.

இவருக்கு விசித்திராவுடன் ( 42) திருமணமாகி, ஸ்ரீநிதி( 22), ஜெயந்தி (14 ) என்று இரு மகள்கள் உள்ளனர் மகள் ஸ்ரீநிதி கடந்த மாதம் படிப்பு முடிந்து கனடாவில் இருந்து கோவை வந்தார்.
ஜெயந்தி தனியார் பள்ளியில் 9-வது வகுப்பு படித்து வந்தார். இதனையடுத்து, ராமச்சந்திரன் பல கோடிமதிப்பில் புதிதாக பங்களா ஒன்று கட்டி வந்தார். இவர் தொழில் காரணமாக பல இடங்களில் கடன் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
குடும்பம்
மேலும், சொத்துக்களை எல்லாம் அடமானம் வைத்து இருப்பதும். அவரது மனைவியின் பெயரில் ஓரு பெரிய தொகையை கடன் வாங்கியிருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக அவர் கடன் பிரச்னையால் தவித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ராமச்சந்திரன் வீட்டிற்கு அவரின் அக்கா ராணி (55) சென்றுள்ளார். அப்போது வீட்டில் ராமச்சந்திரன், அவர் மனைவி, 2 மகள்கள் இறந்து கிடந்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் 4 பேரின் உடல்களை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கை விசாரித்த 4 பேரும் சயனைடு கலந்த தண்ணீரை குடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடைசி கடிதம்
விசித்ரா தற்கொலை செய்யும் முன் ஒரு பேப்பரில் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

அதில், ‘‘என் கணவர் ராமச்சந்திரன் கோபத்தினால் எங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. அவர் அதிகமாக கடன் வாங்கியது எங்களுக்கு பிடிக்கவில்லை. இந்த கடனை வாழ்நாள் முழுவதும் கட்ட முடியாது என நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. நாங்கள் இதை பார்க்க விரும்பாமல் தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கிறோம். என் கணவர் இனி அவர் விருப்பம்போல் வாழட்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘முதலில் விசித்ரா, தனது இரு மகள்களுடன் முதலில் தற்கொலை செய்துள்ளார். மனைவி, மகள்கள் தற்கொலை செய்தபோது அவர் வீட்டில் ஹாலில் இருந்திருப்பதாக தெரிகிறது. அவர் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது மனைவி, மகள்கள் இறந்துவிட்டது தெரிந்து அவரும் சயனைடு பொடி கலந்த நீரை குடித்து தற்கொலை செய்திருக்கலாம்’’ என்று தெரிவித்தார்.     
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    